பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து..!
பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இன்று நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்ட பிரதமர் மோடி, பீகார் முதல்வராக பதவியேற்ற நிதீஷ்குமார் ஜிக்கு வாழ்த்துக்கள். மேலும், அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். பீகாரின் முன்னேற்றத்திற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் ஒன்றிணைந்து செயல்படும். பீகார் நலனுக்கான அனைத்து ஆதரவையும் நான் அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Congratulations to @NitishKumar Ji on taking oath as Bihar’s CM. I also congratulate all those who took oath as Ministers in the Bihar Government. The NDA family will work together for the progress of Bihar. I assure all possible support from the Centre for the welfare of Bihar.
— Narendra Modi (@narendramodi) November 16, 2020