ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு , பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ அதையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ அதையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயல்வதாகத் தெரிவித்தார்.
மாநிலப் பிரிவினைக்குப் பின் ஆந்திர மாநிலத்துக்கு முறைப்படி என்னென்ன சலுகைகள் வழங்கப்பட வேண்டுமோ அதை வழங்கவே தாங்கள் வலியுறுத்தி வருவதாகச் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார். ஜெகன்மோகன் ரெட்டியையும், பவன் கல்யாணையும் தனக்கு எதிராகத் திருப்பும் வேலையில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் எதிரான அலை வீசுவதாகவும், உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…