PM – CARES:”பிஎம் – கேர்ஸ் நிதி என்பது இந்திய அரசின் நிதி அல்ல” – பிரதமர் அலுவலகம் அதிரடி..!

Default Image

பிஎம் – கேர்ஸ் நிதி (PM – CARES) என்பது இந்திய அரசின் நிதி அல்ல என்று பிரதமர் அலுவலகம்,டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிஎம் – கேர்ஸ் நிதியை பொது நிதியாக அறிவித்து அதன் விபரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்று ஒரு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது,பிரதமர் அலுவலகம் சார்பில் எழுத்துப்பூர்வ பிரமாணப்பத்திரமானது தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:”பிரதமரின் அவசர கால பிஎம் – கேர்ஸ் நிதியானது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பொது நிதி அல்ல.இதனால்,அதன் விபரங்களை பொதுவெளியில் மூன்றாம் நபருக்கு வெளியிட முடியாது.குறிப்பாக,அது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா தொற்றின் இக்கட்டான காலகட்டத்தில்,பல்வேறு தனிநபர்கள்,நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்திற்கு நிதியுதவி அளிப்பதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த ‘பிஎம் – கேர்ஸ்’ .அதன்படி,நிறுவனங்கள் மற்றும் மக்கள் பலரும் இதன்மூலம் நிவாரணத் தொகை அளித்துள்ளனர்.

இந்நிலையில்,இந்த பிஎம் – கேர்ஸ் நிதியானது பொது நிதி அல்ல  என்ற தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது மக்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்