பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் பிறந்தநாள் வழ்த்து….
நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) அவர் கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நம் பாரத குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர், “பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வாழ்க்கை மதிப்புகள் மற்றும் ஜனநாயக பாரம்பரியத்தில் விசுவாசத்தின் ஒரு இலட்சியத்தை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். கடவுள் உங்களை எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். தேசம் தொடர்ந்து உங்கள் விலைமதிப்பற்ற சேவைகளைப் பெறுவதற்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.