இன்ப அதிர்ச்சி.! ஒரே இரவில் கோடீஸ்வரர்..60 ரூபாய் லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பம்பர் பரிசு..போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு.!

Default Image
  • மேற்குவங்க மாநிலம் இந்திர நாராயண் சென் என்பவர், நாகாலாந்து மாநில லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
  • வெறும் 60 ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் வாங்கிய அவருக்கு, ஒரு கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது. 

லாட்டரி சீட்டுகளின் மீது சில பேர் பைத்தியமாக இருப்பார்கள். லாட்டரியை சில மாநிலங்களில் தடை பண்ணிருந்தாலும், சில வெளி மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது. லாட்டரியை நம்பி பல பேர் சொத்தை வித்தக் கதையும் இருக்கு, அதில் சில பேர் லாட்டரி மூலம் பணக்காரர் ஆன கதையும் உண்டு.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலம் கிழக்கு புர்த்வான் மாவட்டத்தின் கல்னா பகுதியை சேர்ந்த 70 வயதான இந்திர நாராயண் சென் என்பவர், நாகாலாந்து மாநில லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். வெறும் 60 ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் வாங்கிய அவருக்கு, ஒரு கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது என இன்ப அதிர்ச்சி கொடுத்தார் லாட்டரி கடைக்காரர். பின்னர் அந்த நிகழ்வை இந்திர நாராயண் சென் நம்பவில்லை.

இதனால் லாட்டரி விற்ற கடைக்காரர் அவர் இடத்துக்கு வந்து ஆதாரத்துடன் தெரிவித்த பின்னர் தான் அவர் அதனை நம்பினார். இதனால் ஒரே இரவில் கோடீஸ்வரனாகி விட்டதால், வீட்டை விட்டு வெளியே வரவே தனக்கு பயமாக இருக்கிறது என்று கூறி, காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார். பின்பு அவர் கூறுகையில், லாட்டரியில் தனக்கு கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை துர்கா கோயில் கட்டுவதற்கும், பூஜைக்கும் செலவிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்