தயவு செய்து இதை எங்களிடம் கூறுங்கள்…! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து ப.சிதம்பரம் ட்வீட்…!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி பயன்பாடு குறித்தும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடிசாவுக்கு அடுத்தபடியாக, டெல்லியிலும் தடுப்பூசிகள் முடிந்துவிட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களுக்கு வழக்கமான, போதுமான மற்றும் தடையின்றி தடுப்பூசி வழங்குவதை அவர் எவ்வாறு உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்பதை தயவு செய்து எங்களிடம் கூறுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.
After Odisha, Delhi has run out of vaccines
Will the new Health Minister @mansukhmandviya please tell us how he plans to ensure regular, adequate and uninterrupted supply of vaccines to the States
— P. Chidambaram (@PChidambaram_IN) July 13, 2021