டெல்லியின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரத்து

Default Image

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ருத்திரத்தாண்டவம் ஆடி வருகிறது.அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தேசிய தலைநகரில் உள்ள அனைத்து முக்கிய ரயில்  நிலையங்களிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திங்களன்று தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை டெல்லியில் ஆறு நாள் முழு ஊரடங்கை  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த சில மணி நேரத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் குறித்த அறிவிப்பு வெளியானது.

“பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்துவதில் டெல்லியின் முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன.அவை புது டெல்லி, பழைய டெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், ஆனந்த் விஹார் டெர்மினல் போன்றவை.

கொரோனா  அதிகரித்துள்ளதால், பிளாட்ஃபார்ம் மற்றும் நிலைய வளாகங்களில் பயணிகளின் நுழைவை ஒழுங்குபடுத்துவதற்கான கூடுதல் உத்தரவு வரும் வரை,  டிக்கெட் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது” என்று பிரதேச ரயில்வே மேலாளர் ஆர்.என் ட்வீட் செய்திருந்தார்.ஏற்கனவே இயங்கும் ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என்று ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடைசி பயணிகளை வரை அவர்கள் இலக்குக்கு அழைத்துச் செல்ல ரயில்வே உள்ளது. போதுமான ரயில்கள் இயங்குகின்றன, அவற்றில் பெரும்பாலானவை மிகக் குறைந்த திறன் கொண்ட பயன்பாட்டில் உள்ளன. அனைத்து ரயில்களும் தொடர்ந்து இயங்கும்” என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் டி.ஜே.நாரெய்ன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்