11 வயது சிறுவனின் வயிற்றில் பிளாஸ்டிக் விசில் – அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்!

Default Image

11 வயது சிறுவனின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் விசில் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அரசு மருத்துவமனை ஒன்றில் 12 வயது சிறுவன் கடுமையான வயிற்றுவலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் வயிற்றில் நுரையீரல் பகுதியில் ஏதோ ஒன்று இருப்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்பொழுது சிறுவனின் நுரையீரல் பகுதியில் பிளாஸ்டிக் விசில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக சிறுவனின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் விசிலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இது குறித்து ஒரு சிறுவனின் பெற்றோர் கூறுகையில், இப்பொழுது தான் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்பாராமல் அவன் அந்த விசிலை விழுங்கியுள்ளான்.

ஆனால் அவன் சில சமயங்களில் வாய் திறந்து பேசும் பொழுது கூட விசில் சத்தம் கேட்கும். ஆரம்பத்தில் எங்களுக்கு அவனுக்கு வலிக்கும் என்று தோன்றவில்லை. அதன் பின்பு தான் அவன் படும் சிரமத்தை பார்த்து மருத்துவமனையில் சேர்த்தோம். தற்பொழுது அறுவை சிகிச்சை மூலம் விசில் அகற்றப்பட்டது. மருத்துவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்