இந்தியாவில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சையில் டெல்லியில் சார்ந்த ஒருவர் குணமடைந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று என்பது வேகமாக பரவி வருகிறது. இதனால், 18601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை கொடுக்கலாம் என்றும் ஆனால், அந்த மாத்திரையை மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள வேண்டும் அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.மேலும் பலர் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிளாஸ்மா சிகிச்சை :
கொரோனாவால் குணமடைந்த ஒருவரின் ரத்தத்தை எடுத்து அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்து பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தினால் எதிர்ப்பு சக்தி உருவாகி குணமடைய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவர் 400 மி.லி பிளாஸ்மாவை கொடுக்கலாம். அதை கொண்டு இரண்டு பேருக்கு சிகிச்சை கொடுக்க முடியும் என மருத்துவர்கள்தெரிவிக்கின்றனர்.
டெல்லியில், உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு 49 வயது மதிப்புத்தக்க ஒருவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் ஏப்ரல் 8-ம் தேதி முதல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டது.
இதையெடுத்து, உடல்நிலை முன்னேற்றம் இல்லாததால் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது. இதனால் கடந்த 14-ம் தேதி பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பிறகு, எடுத்த இரண்டு சோதனையில் நெகட்டிவ் என முடிவு வர கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…