டில்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு பிளாஸ்மா சிகிச்சை.!
சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு காரணமாக ராஜிவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது.
இதையடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நுரையீரல் பாதிப்பு அதிகமானதால் அவருக்கு செயற்கை ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியானது. இந்நிலையில், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.