கோழிக்கோடு விமான நிலையத்தை மூடி,இந்த விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணையை நடத்துங்கள் என பொதுமனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 2 ஆக உடைந்தது. இந்த கோர விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமான விபத்தில் காயம் அடைந்தவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கேரளா உயர்நீதிமன்றத்தில் பொதுமனுத்தாக்கல் ஓன்று செய்யப்பட்டுள்ளது.
அதில், கோழிக்கோடு விமான நிலையத்தை மூடி,இந்த விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணையை நடத்துங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…