விமான விபத்து..கேரளாவிற்கு வந்த மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் முரளீதரன்.!
“வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் நேற்று துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 184 இந்தியர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு இரவு 7.40 மணிக்கு வந்தனர்.
இந்த விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் ஓடுபாதையில் தரை இறங்க முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்று அருகில் இருந்த 35 அடி பள்ளத்தில் விமானம் விழுந்தது.
இந்த விபத்தில் 2 விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி. முரளீதரன் கேரளாவிற்கு வந்துள்ளார். விமான நிலையத்தில் உடல்வெப்ப பரிசோதனைக்கு பின் அமைச்சர் வி. முரளீதரன் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை சந்தித்து அமைச்சர் வி. முரளீதரன் ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.