ஒரே நாடு ஒரே தேர்தல் : 2029இல் 3 அமைப்புகளுக்கும் ஒரே தேர்தல்.! மத்திய அரசு புதிய முடிவு.?

Former President of India Ramnath Govind

நமது நாட்டில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தனித்தனி தேர்தல் நடைபெற்று வருகின்றன. இது போக உள்ளாட்சி அமைப்புக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகளுக்கான தேர்தல்களை ஒன்றாக ஒரே நேரத்தில் நடத்தினால் அரசுக்கு செலவு, நேரம் ஆகியவை அதிகளலவில் தேவைப்படாது என கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.

இதற்கென பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. அந்த உயர்மட்ட குழுவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகித்து வருகிறார். குழுவானது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டம் அண்மையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர். இதில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து , ஒரேநாடு ஒரே தேர்தல் எனும் திட்டத்தின் கீழ், மத்திய மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்தன. இது பற்றிய முக்கிய முடிவுகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வாய்ப்பில்லை. தொகுதி வரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் உள்ளன. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ், நாடாளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கு மட்டுமல்லாது உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி கணக்கிட்டால் வரும் 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு  தேர்தல் நடத்தலாம் என்றும் அப்போது பல்வேறு மாநிலங்களில் ஆளும்கட்சியின் சட்டசபை ஆட்சி காலத்தை நீட்டிப்பு செய்தும், சில மாநிலங்களில் ஆளும்கட்சியின் சட்டசபை ஆட்சி காலத்தை குறைக்க செய்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்