சாலையை விரிவுபடுத்துவதற்காக மரங்களை வெட்டும் திட்டத்திற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் சாலையை விரிவு படுத்த 19 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி (பிஎம்சி) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் (பிஐஎல்) செய்துள்ளனர். மும்பையின் கிங்ஸ் சர்கிளில் உள்ள கே.ஏ.சுப்ரமணியம் சாலையை விரிவுபடுத்துவதற்காக அந்த பகுதியில் உள்ள 19 மரங்களை வெட்டத் திட்டமிட்டது.
வழக்கறிஞர் கிரிஷ்மா லாட் கூறுகையில் :
செப்டம்பர் 2022 இல் சாலையில் உள்ள மரங்களுக்கு எண்கள் இடப்பட்ட பிறகு பிஎம்சி ஒரு சாலையை அமைத்தது. தற்பொழுது அந்த சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்ககளை வெட்ட திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பிஎம்சி மரங்கள் மீது ஒரு அறிவிப்பை ஒட்டியது. அதில் சாலையின் அகலம் 8.22 மீட்டரை 13.77 மீட்டராக அதிகரிப்பதாகவும் இதனால் 11 மரங்களை இடமாற்றம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் சோரு பத்தேனா :
மரம் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மர ஆணையத்திடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோரு பத்தேனா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இவை முழுமையாக வளர்ச்சியடைந்த மரங்கள் என்றும் சாலையோர மரங்களை வைத்திருப்பதால் மாசு மற்றும் வெப்பநிலை அளவைக் குறைக்கவும், குடிமக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கூறியிருந்தார். இந்த சாலையோர மரங்கள் நம் நகரத்திற்கு மிகவும் முக்கியமானவை. எனவே அவற்றை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று மேலும் கூறியுள்ளார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…