சாலையை விரிவுபடுத்த மரங்களை வெட்ட திட்டம்..! பிஎம்சி மீது பொதுநல வழக்கு தாக்கல்..!

Default Image

சாலையை விரிவுபடுத்துவதற்காக மரங்களை வெட்டும் திட்டத்திற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் சாலையை விரிவு படுத்த 19 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி (பிஎம்சி) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் (பிஐஎல்) செய்துள்ளனர். மும்பையின் கிங்ஸ் சர்கிளில் உள்ள கே.ஏ.சுப்ரமணியம் சாலையை விரிவுபடுத்துவதற்காக அந்த பகுதியில் உள்ள 19 மரங்களை வெட்டத் திட்டமிட்டது.

BMC

வழக்கறிஞர் கிரிஷ்மா லாட் கூறுகையில் : 

செப்டம்பர் 2022 இல் சாலையில் உள்ள மரங்களுக்கு எண்கள் இடப்பட்ட பிறகு பிஎம்சி ஒரு சாலையை அமைத்தது. தற்பொழுது அந்த சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்ககளை வெட்ட திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பிஎம்சி மரங்கள் மீது ஒரு அறிவிப்பை ஒட்டியது. அதில் சாலையின் அகலம் 8.22 மீட்டரை  13.77 மீட்டராக அதிகரிப்பதாகவும் இதனால் 11 மரங்களை இடமாற்றம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

widen Mumbai road 1

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோரு பத்தேனா : 

மரம் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மர ஆணையத்திடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோரு பத்தேனா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இவை முழுமையாக வளர்ச்சியடைந்த மரங்கள் என்றும் சாலையோர மரங்களை வைத்திருப்பதால் மாசு மற்றும் வெப்பநிலை அளவைக் குறைக்கவும், குடிமக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கூறியிருந்தார். இந்த சாலையோர மரங்கள் நம் நகரத்திற்கு மிகவும் முக்கியமானவை. எனவே அவற்றை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று மேலும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்