நடிகர் சல்மான் கானை கொல்ல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு பிளான் பி இருந்ததாக டெல்லி மற்றும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாடகர் சித்து மூஸ் வாலாவின் கொடூரமான கொலையின் மூளையாக இருந்தவர், அவரது ஹிட்லிஸ்ட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
திகார் சிறையில் இருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்துள்ளனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் பாதுகாப்பு சமீபத்தில் பலப்படுத்தப்பட்டது மற்றும் அவருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
பண்டிட்டும் அவரது கூட்டாளிகளும் பன்வெல்லில் சல்மானுக்கு சொந்தமான பண்ணை வீடு அருகே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து சல்மான் கானை கொல்ல திட்டமிட்டு பலமுறை அந்த இடத்தை சுற்றி வந்துள்ளனர்.
பிஷ்னோய் கும்பல் கடந்த மூன்று மாதங்களில் கானைக் கொல்ல இரண்டு முறை முயற்சித்ததாக பஞ்சாப் போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, சல்மான் கானை கொல்ல திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…