பீட்சா டெலிவரி செய்யலாம்..ரேஷன் பொருள் டெலிவரி செய்யக்கூடாதா?- கெஜ்ரிவால்..!
- டெல்லியில் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
- இந்த திட்டம் அமல்ப்படுத்த 2 நாட்கள் உள்ள நிலையில் மத்திய அரசு திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறாததாலும், நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெறுவதாலும் இதற்கு அனுமதி தர டெல்லி துணை நிலை ஆளுநர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இன்று காணொளியில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், டெல்லியில் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் அமல்ப்படுத்த 2 நாட்கள் உள்ள நிலையில் மத்திய அரசு திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளது. பீட்சாவை நேரடியாக வீடுகளில் டெலவரி செய்ய முடியும் ஆனால், ஏன் ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யக் கூடாது.
நாங்கள் அனுமதி பெறவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒருமுறை அல்ல 5 முறை அனுமதி பெற்றுள்ளோம். டெல்லியின் 70 லட்சம் ஏழை மக்கள் சார்பாக பிரதமர் மோடி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.