ஐன்ஸ்டீனா?நியூட்டனா? கன்பியூஸ் ஆன பியூஸ் கோயல்
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறிய ஒரு வார்த்தை நாடு முழுவதும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.
இன்று வர்த்தக மையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.அப்பொழுது தான் அதற்கு உதாரணமாக ஓன்று கூறினார்.அதாவது கணக்கு ஒன்றும் ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க உதவ வில்லை என்று கூறினார்.
இவர் கூறிய அந்த ஐன்ஸ்டீன் உதாரணம் நாடு முழுவதும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.நாம் அனைவரும் அறிந்தது புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது நியூட்டன் என்று ஆனால் அமைச்சர் இவ்வாறு நியூட்டனுக்கு பதிலாக ஐன்ஸ்டீன் பெயரை கூறியது முதல் சமூக வலைத்தளவாசிகள் அவரை ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.