மாநிலங்களவை பாஜக தலைவராக பியூஷ் கோயல் ..!
பாஜக மாநிலங்களவை குழு தலைவராக மத்தியமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.இதைத்தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. மூத்த அமைச்சர்கள் 12 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். மொத்தம் 43 அமைச்சர்கள் புதிதாகப் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், பாஜக மாநிலங்களவை குழு தலைவராக மத்தியமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவைத்தலைவராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதனால், மாநிலங்களவை பாஜக துணைத் தலைவராக இருந்த வந்த பியூஷ் கோயல் மாநிலங்களவை பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
ரயில்வே துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் வகித்து ரயில்வே துறை அஷ்வினி வைஷ்ணவிடம் ஒப்படைக்கப்பட்டது.