அசாமில் மின்னல் தாக்கியதால் 11 வயது சிறுமி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையில் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கி தர்ராங் மாவட்டத்தின் கர்போரி கிராமத்தில் 60 வயதான மஜூருதீன் என்ற நபர் உயிரிழந்துள்ளார். இவரைத்தொடர்ந்து குவஹாத்தியின் சத்கான் பகுதியில் 11 வயதான மம்தா பேகம் என்ற சிறுமியும் மின்னல் தாக்கியதால் உயிரிழந்ததாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது
குவஹாத்தி பிராந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, அடுத்த இரண்டு நாட்களில் கவுகாத்தியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும் இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு மார்ச் 17 ஆம் தேதி வரை மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…