இந்திய பெருங்கடலில் கடற்கொள்ளையர்கள்.. பிரதமர் மோடி உறுதி!

pm modi

PM Modi : இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், கடற்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் MV Ruen என்ற சரக்கு கப்பலை அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, தங்கள் வசம் வைத்திருந்தனர்.

Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

அந்த கப்பலில் பல்கேரியா, மியான்மர் மற்றும் அங்கோலா ஆகிய நாட்டை சேர்த்தவர்கள் இருந்ததாக கூறப்பட்டது. இந்த கப்பல் மற்றும் அதில் இருந்தவர்களை மீட்க இந்திய கடற்படை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் மீட்க முடியவில்லை. இந்த சூழலில் கடந்த 15ம் தேதி இந்திய கடற்பகுதிக்கு அருகே வந்த கடத்தப்பட்ட அந்த MV Ruen சரக்கு கப்பலை, அப்போது ரோந்து பணியில் இருந்த INS போர் கப்பல் தடுத்து நிறுத்தியது.

இதனால், கடற்கொள்ளையர்கள் மற்றும் இந்திய கடற்படையினர் இடையே கடும் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்த நிலையில், கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்து, கடத்தப்பட்ட கப்பலில் இருந்த சுமார் 15 பேரை இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். அதேபோல், MVRuen சரக்கு கப்பலும் மீட்க்கப்பட்டது.

Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக!

எனவே, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் மற்றும் அதில் இருந்தவர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படைக்கு பாராட்டுகள் குவிந்தது. அந்தவகையில், கடத்தப்பட்ட பல்கேரியக் கப்பலான “ருயென்” மற்றும் 7 பல்கேரியா நாட்டை சேர்த்தவர்கள் உட்பட கப்பல் குழுவினரை பாதுகாப்பாக மீட்ட INS கடற்படையின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது.

Read More – மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்… வரலாற்று வெற்றி!

இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என பல்கேரிய அதிபர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,  பல்கேரியா நாட்டை சேர்ந்த 7 பேர் பாதுகாப்பாக உள்ளனர். விரைவில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள். மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், கடற்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்