முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மறைவிற்கு அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தனர்.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் மனைவி உட்பட 13 பேர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் இழந்தனர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காட்டேரி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 80 சதவீத காயங்களுடன் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, ட்விட்டரில் அமித்ஷா, நமது ஜெனரல் பிபின் ராவத் ஜியை மிகவும் துயரமான விபத்தில் இழந்துள்ளதால், தேசத்திற்கு மிகவும் சோகமான நாள். தாய்நாட்டிற்கு மிகுந்த பக்தியுடன் சேவையாற்றிய துணிச்சலான வீரர்களில் இவரும் ஒருவர். அவரது முன்மாதிரியான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.
மதுலிகா ராவத் மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் சோகமான மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. இந்த துயரமான இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு முன்னோடியில்லாத சோகம் மற்றும் இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவர்களின் குடும்பத்துடன் உள்ளன என தெரிவித்துள்ளார்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…