முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருமே குற்றவாளிகள் என தீர்ப்பு.
புதுச்சேரியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி (மத்திய அமைச்சராக இருந்தபோது) வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த விசாரணையில் தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு 2014-ஆம் ஆடுனு முதல் தற்போது வரை விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருமே குற்றவாளிகள் என இன்று புதுச்சேரி உள்ள என்ஐஏ சிறப்பு மற்றும் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுத்த வழக்கில் தமிழர் விடுதலை படையை சேர்ந்த 6 பேரும் குற்றவாளி என்று புதுச்சேரி நீதிமன்றம் நீதிபத்தில் செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார். அதன்படி, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. தமிழக சிறைகளிலுள்ள திருச்செல்வம், தமிழரசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான் மார்ட்டின் மற்றும் கார்த்திக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…