#BREAKING: மீண்டும் கேரளா முதல்வராக பினராய் விஜயன் பதவியேற்பு..!

Default Image

கேரள முதலமைச்சராக 2-வது முறையாக பினராய் விஜயன் பொறுப்பேற்றுள்ளார்.

கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி தேர்தலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், இன்று கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழா திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. முதல்வருடன் 21 புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பினராய் விஜயன் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களுமே புதுமுகங்களாக உள்ளனர். மேலும், இவரது அமைச்சரவையில் பினராய் விஜயன் மருமகன் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்