கேரளா 2023 நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்.! ஒரே மேடையில் கமல், லால், மம்முட்டி.!

Kerala 2023 - CM Pinarayi Vijayan - Kamalhaasan - Mammutty - Mohanlal

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ‘கேரளா 2023 (Keraleeyam 2023)’ எனும் நிகழ்வு கொண்டாப்படுகிறது. இந்த ஒரு வார காலம் திருவனந்தபுரத்தில் கேரளா பற்றிய பல்வேறு சிறப்புகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள்,  கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

கேரளா 2023 (Keraleeyam 2023) விழாவினை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இன்று புதுச்சேரி விடுதலை தினம்! இவர்களுக்கான உதவித்தொகை உயர்வு..கொடியேற்றி வைத்தபின் முதல்வர் அறிவிப்பு!

தொழில் அதிபர்கள் யூசுப் அலி, ரவிப்பிள்ளை மற்றும் நடிகர்களில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், ஷோபனா, மஞ்சு வாரியர் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் பினராயி விஜயன், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் ஒரே சோபாவில் அருகருகே அமர்ந்திருந்தனர்.

இந்த மெகா விழா குறித்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வளர்ந்த நாடுகளின் வாழ்க்கைத் தரத்திற்கு கேரளா தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அரசின் நோக்கத்திற்கு கேரளா-2023 புதிய உத்வேகத்தை அளிக்கும். மாநிலத்தில் அனைத்து மக்களும் பெருமைப்படும் வகையில் கேரளா அமைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை உலக மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இது ஒரு வார கால நிகழ்வு, கேரள பிறந்த தினத்தன்று (மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி) இந்த விழா தொடங்கபட்டுள்ளது. அந்தந்த குறிப்பிட்ட ஆண்டின் சாதனைகளைக் குறிக்கும் வகையில் கேரளா ஆண்டு விழாவாக கேரளீயம் விழா கொண்டாடப்படும் என தெரிவித்தார்.

கேரளாவின் மிகப் பெரிய கொண்டாட்டமான ‘கேரளா 2023’ நவம்பர் 1 (இன்று) முதல் நவம்பர் 7 வரை கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. கேரள அரசால் மேற்கொள்ளப்பட்ட கேரளாவின் முன்னேற்றம், சாதனைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு கூறுவதை நோக்கமாக இந்த நிகழ்ச்சி கொண்டுள்ளது. கருத்தரங்குகள், கண்காட்சிகள், திருவிழாக்கள் என40 க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் இந்த கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையில் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்