கேரளாவுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க பினராயி விஜயன் கோரிக்கை..!

Published by
murugan

மத்திய அரசிடம் கூடுதலாக 50 லட்சம் டோஸ் வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை.

அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே மாநிலத்தில் போதுமான தடுப்பூசி இருப்பதாகவும், கூடுதலாக 50 லட்சம் டோஸ் வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை வைத்தார். அவர் எழுதிய கடிதத்தில் தடுப்பூசி  பற்றாக்குறை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 56,84,360 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 54,40,740 கோவிஷீல்ட் மற்றும் 2,43,620 கோவாக்சின் ஆகியவை அடங்கும்.

ஏப்ரல் 11 வரை 48,24,505 தடுப்பூசியை நாங்கள் வழங்கியுள்ளோம். தடுப்பூசி  அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் கூடுதலாக 50 லட்சம் டோஸ் தடுப்பூசி ஒதுக்குமாறு  அவர் கேட்டுக்கொண்டார். கேரளாவில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசி வழங்கி வருவதாகவும், அதை ஒரு நாளைக்கு 2.5 முதல் மூன்று லட்சம் தடுப்பூசி வழங்க  அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கேரளா மாநிலம் முழுவதும் 1,826 தடுப்பூசி மையங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவமனைகளில் 1,402 மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 424 மையங்கள்  உள்ளன என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

15 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

28 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

39 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

46 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago