கேரளாவுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க பினராயி விஜயன் கோரிக்கை..!
மத்திய அரசிடம் கூடுதலாக 50 லட்சம் டோஸ் வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை.
அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே மாநிலத்தில் போதுமான தடுப்பூசி இருப்பதாகவும், கூடுதலாக 50 லட்சம் டோஸ் வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை வைத்தார். அவர் எழுதிய கடிதத்தில் தடுப்பூசி பற்றாக்குறை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 56,84,360 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 54,40,740 கோவிஷீல்ட் மற்றும் 2,43,620 கோவாக்சின் ஆகியவை அடங்கும்.
ஏப்ரல் 11 வரை 48,24,505 தடுப்பூசியை நாங்கள் வழங்கியுள்ளோம். தடுப்பூசி அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் கூடுதலாக 50 லட்சம் டோஸ் தடுப்பூசி ஒதுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். கேரளாவில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசி வழங்கி வருவதாகவும், அதை ஒரு நாளைக்கு 2.5 முதல் மூன்று லட்சம் தடுப்பூசி வழங்க அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கேரளா மாநிலம் முழுவதும் 1,826 தடுப்பூசி மையங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவமனைகளில் 1,402 மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 424 மையங்கள் உள்ளன என தெரிவிக்கபப்ட்டுள்ளது.