சீரழிக்க முயன்றவர்களுக்கு பதிலடியாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து பினராயி விஜயன் கருத்து.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணுதல் இன்று மாநிலம் முழுவதும் 244 மையங்களில் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் பெரும்பாலான இடங்களை இடதுசாரிகள் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4 இல் இடதுசாரியும், 2 இல் காங்கிரஸூம் முன்னணியில் உள்ளது. இதுபோன்று, 87 நகராட்சிகளில் காங்கிரஸ் 45-லும், இடதுசாரிகள் 35யிலும், பாஜக 2 யிலும் முன்னணியில் உள்ளது.
இதையடுத்து, 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 10ல் இடதுசாரிகளும், 4ல் காங்கிரஸும் முன்னிலை பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 941 கிராம பஞ்சாயத்துகளில் 514ல் இடதுசாரிகளும், 377ல் காங்கிரஸூம், 22ல் பாஜகவும் முன்னணியில் உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன், உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி முன்னணி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இது மக்களுக்கான வெற்றி, கேரளாவை சீரழிக்க முயன்றவர்களுக்கு பதிலடியாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவரது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், எல்.டி.எஃப் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்கு நன்றி. இது மதச்சார்பின்மை மற்றும் வளர்ச்சிக்கான வெற்றியாகும். கேரள மக்களின் நம்பிக்கையினால் நாம் தாழ்மையுடன் இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…