உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து பினராயி விஜயன் கருத்து.!

Default Image

சீரழிக்க முயன்றவர்களுக்கு பதிலடியாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து பினராயி விஜயன் கருத்து.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணுதல் இன்று மாநிலம் முழுவதும் 244 மையங்களில் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் பெரும்பாலான இடங்களை இடதுசாரிகள் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4 இல் இடதுசாரியும், 2 இல் காங்கிரஸூம் முன்னணியில் உள்ளது. இதுபோன்று, 87 நகராட்சிகளில் காங்கிரஸ் 45-லும், இடதுசாரிகள் 35யிலும், பாஜக 2 யிலும் முன்னணியில் உள்ளது.

இதையடுத்து, 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 10ல் இடதுசாரிகளும், 4ல் காங்கிரஸும் முன்னிலை பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 941 கிராம பஞ்சாயத்துகளில் 514ல் இடதுசாரிகளும், 377ல் காங்கிரஸூம், 22ல் பாஜகவும் முன்னணியில் உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன், உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி முன்னணி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இது மக்களுக்கான வெற்றி, கேரளாவை சீரழிக்க முயன்றவர்களுக்கு பதிலடியாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவரது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், எல்.டி.எஃப் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்கு நன்றி. இது மதச்சார்பின்மை மற்றும் வளர்ச்சிக்கான வெற்றியாகும். கேரள மக்களின் நம்பிக்கையினால் நாம் தாழ்மையுடன் இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்