இஸ்ரோ விஞ்ஞானிகள் பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை- கேரள முதல்வர் பினராயி விஜயன்
இஸ்ரோ விஞ்ஞானிகள் பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை சந்திராயன் -2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.இதனால் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இதனை எதிர் பார்த்து இருந்த விஞ்ஞானிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.எந்த நாடும் நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கியதில்லை. ஆனாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை .சந்திரயான்-2 திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.