அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கு முன் பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து விழுந்த விமானி மரணம்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு முன்பு சிறிய சரக்கு விமானத்தின் துணை விமானி கீழே விழுந்து உயிரிழந்தார்.
ராலே-டர்ஹாம் சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கே சுமார் 30 மைல் தொலைவில் ஃபுகுவே-வரினா நகரில் 23 வயதான சார்லஸ் ஹெவ் க்ரூக்ஸின் துணை விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் விமான நிலையத்தில் சக்கரங்களில் ஒன்று தரையிறங்கும் கியரில் இருந்து விலகியதைத் தெரிவித்ததையடுத்து விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அதிலிருந்த துணை விமானி விமானத்திலிருந்து குதித்துள்ளார். அவரிடம் பாராசூட் இல்லை என்று நியூஸ் அவுட்லெட்ஸ் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
அதிலிருந்த மற்றொரு விமானி சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறினார். இச்சம்பவம் குறித்து மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…