பிரதமர் மோடியின் புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இது குறித்து சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்த நிலையில் அண்மையில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இதனைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.இதற்கு இடையில் பிரதமர் மோடி லடாக் தலைநகரான லே பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.இதன் பின் கல்வான் பள்ளத்தாக்கில் காயமடைந்த இந்திய வீரர்களை பிரதமர் மோடி ராணுவ மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,இந்த புகைப்படம் ஒரு மில்லியன் வார்த்தைகளுக்கு மதிப்பானது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீரர்களை சந்தித்த புகைப்படத்தையும்,பிரதமர் மோடி சந்தித்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…