கொரோனா தடுப்பு மருந்து: ஊசி மூலம் செலுத்திய துணைத் தலைவர் ஸ்ரீனிவாசனின் புகைப்படம்? மறுத்த பாரத் பயோடெக் நிறுவனம்!

Default Image

கொரோனா மருந்தான கோவாக்ஸினை அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் உடம்பிற்குள் ஊசி மூலம் செலுத்தும் புகைப்படம் வைரலான நிலையில், அந்த புகைப்படம் போலியானது என பாரத் பயோடெக் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.6 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அதில் ஒருபங்காக, இந்தியா, ஹைதராபாத்தை தலைமையாக கொண்ட பாரத் பயோடெக் எனும் நிறுவனம், கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, “கோவாக்சின்” தடுப்பூசியை கண்டுபிடித்தது.

இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தியதில் பயனளித்த நிலையில், கோவாக்சின் மருந்தை ஜூலை மாதம் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஐசிஎம்ஆர் அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து ஜூலை 7 ஆம் தேதி முதல் சென்னை உட்பட 12 இடங்களில் இந்த தடுப்பு மருந்து, மனிதர்களிடம் பரிசோதிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஸ்ரீனிவாசன், முதல் கோவாக்சின் மருந்தை தனது உடம்பிற்குள் ஊசி மூலம் செலுத்தும் புகைப்படம் ஒன்று, பலரால் பகிரப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு பாரத் பயோடெக் நிறுவனம் மறுப்பு தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டது. அந்த பதிவில்

வாட்ஸ் ஆப் மற்றும் இதர சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் மற்றும் செய்திகள் பாரத் பயோடெக் மூலம் வெளியானவை அல்ல. அங்கு பரவிவரும் புகைப்படமானது, அங்கு உற்பத்தி ஊழியர்களுக்ளையும் பரிசோதிக்கும் ஒரு வழக்கமான இரத்த ஓட்ட நடைமுறையாகும். கொரோனவை எதிர்த்தும், மக்கள் நன்மைக்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்