தொலைபேசி உளவு ஒரு ஜனநாயக குற்றம் என அகிலேஷ் யாதவ் ட்வீட்.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்ஸிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொராக்கோ, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தது என THE WIRE ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தொலைபேசியில் உளவு பார்ப்பதன் மூலம் மக்களின் தனிப்பட்ட பேச்சைக் கேட்பது ‘தனியுரிமைக்கான உரிமையை’ முற்றிலும் மீறுவதாகும். பாஜக இந்த வேலையைச் செய்து வருகிறதென்றால் அது தண்டனைக்குரியது, அது தெரியாது என்று பாஜக அரசு சொன்னால் அது தேசிய பாதுகாப்பு மீதான தோல்வி. தொலைபேசி உளவு ஒரு ஜனநாயக குற்றம்.’ என பதிவிட்டுள்ளார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…