இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினை…8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை.!

Default Image

இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை முன்பு இல்லாத அளவிற்கு பேச்சு வார்த்தை நடத்துவதில் தீவிரமடைந்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளின் இராணுவ படைகளை எல்லையில் குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், படைகளை குறைக்கவும், பதற்றத்தை தணிக்கவும், ராணுவ தளபதிகிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இதுவரை 7 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், எந்தவிதா முன்னேற்றம் நடந்த மாதிரி தெரியவில்லை. இதை தொடர்ந்து , 8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் இன்று தொடங்கியது.

தற்போது, இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள  கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் உள்ள சில இடங்களில் குறிப்பிட்ட அளவிலான படைகள் பின்வாங்கப்படும் என மத்திய அரசு எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்