5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது.
5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49 தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி 5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதுவரை நடைபெற்ற 4 கட்ட மக்களவைத் தேர்தலில் 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், நான்காம் கட்ட தேர்தல் முடிவடைந்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி, மே 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
எங்கெல்லாம் வாக்குப்பதிவு
- உத்தரப் பிரதேசம் – 14
- மகாராஷ்டிரா – 13
- மேற்கு வங்கம் – 7
- பீகார் – 5
- ஒடிசா – 5
- ஜார்கண்ட் -3
- ஜம்மு காஷ்மீர் – 1
- லடாக் – 1
முக்கிய வேட்பாளர்கள்
- ராகுல் காந்தி – உத்தரப் பிரதேசம் மாநிலம் (ரேபரேலி தொகுதி)
- ஸ்மிருதி இரானி – உத்தரப் பிரதேசம் மாநிலம் (அமேதி தொகுதி)
- ராஜ்நாத் சிங் – உத்தரப் பிரதேசம் மாநிலம் (லக்னோ தொகுதி)
- கரண் பூஷன் சிங் – உத்தரப் பிரதேசம் மாநிலம் (கைசர்கஞ்ச் தொகுதி)
- ரோகினி ஆச்சார்யா- பீகார் மாநிலம் (சரண் தொகுதி)
- சிராக் பாஸ்வான் – பீகார் மாநிலம் (ஹாஜிப்பூர் தொகுதி)
- பியூஷ் கோயல் – மகாராஷ்டிரா மாநிலம் (மும்பை வடக்கு)
- அரவிந்த் சாவந்த் – மகாராஷ்டிரா மாநிலம் (மும்பை தெற்கு)
- உஜ்வல் நிகம் – மகாராஷ்டிரா மாநிலம் (மும்பை நார்த் சென்ட்ரல்)
- உமர் அப்துல்லா – ஜம்மு-காஷ்மீர் (பாரமுல்லா)