4-ம் கட்ட ஊரடங்கு தளர்வு மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர்,மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி உடன் 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது.
இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4-ம் கட்ட தளர்வுகளில் நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும், அந்தந்த மாநிலங்கள் கொரோனா தாக்கத்தை பொறுத்து முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்,பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதிக்காது எனவும் தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும் என கூறப்படுகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…