3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதற்கான பரிசோதனையின் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், மஹாராஷ்டிராவிலுள்ள சூசன் பொது மருத்துவமனையில் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது.
இந்த மருத்துவமனையின் டீன் மருத்துவர் முரளிதர் தம்பே கூறுகையில், தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை துவங்கியுள்ளோ, இந்த முறை 150 முதல் 200 வரையிலான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதனைக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனகாவுடன் கூட்டு சேர்ந்து தான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்த மருந்தை உருவாக்குகிறது.