பீகாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.வாக்குபதிவு தற்போது தொடங்கியுள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடையும் நிலையில் மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்., 28ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், இன்று நடைபெறுகிறது.2ம்கட்ட தேர்தலுக்காக கடந்த சில நாட்களாகவே சூறாவளி பிரசாரத்தினை கட்சிகள் நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரங்கள் முடிவடைந்தது.
காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் தனிமனித இடைவெளியோடும், முக கவசம் அணிந்து வாக்களித்து வருகின்றனர்.
2ம் கட்ட தேர்தலில் எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு:-
2ம்கட்ட தேர்தலானது 17 மாவட்டங்களை உள்ளடக்கிய 94 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
94 தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேர்களும் பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர்களும் அதில் திருநங்கையர் 980 பேரும் உள்ளனர்.
2ம்கட்ட தேர்தலுக்காக 41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்வேட்பாளர்கள் மற்றும் 146 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.
மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும்,தராலி
தனி தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் களத்தில் நிற்கின்றனர்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…