ஃபைசர் நிறுவனம் விரைந்து விண்ணப்பித்தால் தான் பரிசீலித்து அனுமதி தரமுடியும் – மருந்து கட்டுப்பாட்டாளர்
ஃபைசர் நிறுவனம் விரைந்து விண்ணப்பித்தால்தான் அதை பரிசீலித்து அனுமதி தரமுடியும் என மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், இந்திய முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும், கோவக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடர்னா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஃபைசர் நிறுவனம் தனது தடுப்பூசியை அனுமதிக்க கோரி மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் விண்ணப்பிக்கவில்லை என்றும், ஃபைசர் நிறுவனம் விரைந்து விண்ணப்பித்தால் தான் அதை பரிசீலித்து அனுமதி தரமுடியும் என மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனுமதி கோரி விண்ணப்பிக்குமாறு ஃபைசர் நிறுவனத்துக்கு இருமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.