மும்பையில் பெட்ரோல் விலை…! ரூ.100-க்கு 6 பைசா குறைவாக விற்பனை…!
மும்பையில், பெட்ரோல் விலை ரூ.100-க்கு, 6 பைசா குறைவாக விற்பனை ஆகிறது. இந்தியாவிலேயே போபால் மாநிலத்தில் தான் பெட்ரோல் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது. இதன்படி இந்தியாவில் தினம்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கை மேலும் கடுமையாகி வருகிறது.
இந்த மாதத்தில் மட்டும் 14-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ .00 விற்பனையாகி வருகிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தலைநகர் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 99.94 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில், பெட்ரோல் விலை ரூ.100-க்கு, 6 பைசா குறைவாக விற்பனை ஆகிறது. இந்தியாவிலேயே போபால் மாநிலத்தில் தான் பெட்ரோல் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. போபால் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.77 ரூபாய்க்கும், டீசல் 93.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.