பெட்ரோல் டீசல் விலையை அடுத்து சிலிண்டர் விலையும் உயர்வு ..!

Default Image

பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதை அடுத்து சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அறிவிப்பது போல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை அறிவிக்கின்றன. அதன்படி இன்று முதல் புதிய விலையை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Image result for சிலிண்டர்இண்டேன் நிறுவனம் சென்னையில் மானியத்துடன் கூடிய வீட்டுப் பயன்பாட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 2ரூபாய் 12காசுகள் உயர்த்தி 481ரூபாய் 84காசுகளாக அறிவித்துள்ளது.

மானியம் இல்லாத வீட்டுப் பயன்பாட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 49ரூபாய் ஐம்பது காசுகள் உயர்த்தப்பட்டு 712ரூபாய் ஐம்பது காசுகளாக உள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 78ரூபாய் உயர்த்தப்பட்டு 1334ரூபாயாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்