பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைப்பு! மத்திய அரசு அறிவிப்பு
Petrol Diesel Price : பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் விலை குறைப்பு அமலுக்கு வருவதாக பெட்ரோலிய அமைச்சர் ஹர்திப்சிங் புரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.
Read More :- குடியுரிமை..! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால் சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த பெட்ரோல் விலை 102.63-க்கும், ரூ.102.59 காசுகள் இருந்த டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் விலை குறைப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Read More :- நிதி கேட்டால் பிரிவினைவாதி என்கிறார்கள்… முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
அதன்படி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் சென்னையில் 102.63 பைசாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல் இனி 100.75 பைசாவிற்கு விற்கப்படும். அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.100 குறைத்த நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.