புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

வாட் வரி உயர்வால் புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2 ஏற்றம் காணவுள்ளது . இந்த விலை ஏற்றம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

Puducherry Petrol Diesel Price hike

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும் வாட் வரியை அதிகரித்து அதனை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அண்டை மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் இடையேயான பெட்ரோல், டீசல் விலை வித்தியாசமும் குறையும்.

புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரி 14.55%-லிருந்து 16.98%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காரைக்காலில் 14.55%லிருந்து 16.99%ஆகவும், மாஹேவில் 13.32%லிருந்து 15.79%ஆகவும், ஏனாமில் 15.26%லிருந்து 17.69%ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, டீசல் மீதான வாட் வரியானது புதுச்சேரியில் 8.65%லிருந்து 11.22%ஆகவும், காரைக்காலில் 8.65%லிருந்து, 11.23%ஆகவும், மாஹேவில் 6.91%லிருந்து 9.52%ஆகவும், ஏனாமில் 8.91%லிருந்து 11.48%ஆகவும் அதிகாரிக்கப்பட்டுள்ளது.

விலை ஏற்ற விவரம் :

இந்த வாட் வரி உயர்வின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2 ஏற்றம் கண்டுள்ளது.

  • புதுச்சேரியில் ரூ.94.26 என்று இருந்த பெட்ரோல் விலை ரூ.96.26 என ஏற்றம் கண்டுள்ளது.
  • காரைக்காலில் ரூ.94.03 என்று இருந்த பெட்ரோல் விலை ரூ.96.03 என ஏற்றம் கண்டுள்ளது.
  • மஹேவில் ரூ.91.92 என்று இருந்த பெட்ரோல் விலை ரூ.93.92 என ஏற்றம் கண்டுள்ளது.
  • ஏனாமில் ரூ.94.92 என்று இருந்த பெட்ரோல் விலை ரூ.96.92 என ஏற்றம் கண்டுள்ளது.

அதே போல டீசல் விலையானது,

  • புதுச்சேரியில் ரூ.84.48 என்று இருந்த டீசல் விலையானது ரூ.86.48 என ஏற்றம் கண்டுள்ளது.
  • காரைக்காலில் ரூ.84.31 என்று இருந்த டீசல் விலையானது ரூ.86.31 என ஏற்றம் கண்டுள்ளது.
  • மஹேவில் ரூ.81.90 என்று இருந்த டீசல் விலையானது ரூ.83.90 என ஏற்றம் கண்டுள்ளது.
  • ஏனாமில் ரூ.84.75 என்று இருந்த டீசல் விலையானது ரூ.86.75 என ஏற்றம் கண்டுள்ளது.

விலை வித்தியாசம் :

  • தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே பெட்ரோல் விலையில் சுமார் ரூ.6 என்ற அளவிலும், டீசல் விலையில் சுமார் ரூ.7.50 என்ற அளவிலும் வித்தியாசம் உள்ளது.
  • கேரளா (கண்ணூர்) மற்றும் புதுச்சேரிக்கு (ஏனாம்) இடையே பெட்ரோல் விலையில் சுமார் ரூ.13 என்ற அளவிலும், டீசல் விலையில் சுமார் ரூ.10.50 என்ற அளவிலும் வித்தியாசம் உள்ளது.
  • ஆந்திரா (காக்கிநாடா) மற்றும் புதுச்சேரிக்கு (மஹே) இடையே பெட்ரோல் விலையில் சுமார் ரூ.15 என்ற அளவிலும், டீசல் விலையில் சுமார் ரூ.11 என்ற அளவிலும் வித்தியாசம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025