620 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு இன்றிரவு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த 2021-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக இருந்த காரணத்தால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 112 ரூபாயை தொட்டது. அதுபோல டீசல் விலையும் 103 ரூபாயாக உயர்ந்தது.
கடந்த 2022ல் மே மாதம் 21-ந்தேதி மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான கலால் வரியை குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.9-ம், டீசல் ரூ.7.50 காசும் குறைந்தது. இதையடுத்து கடந்த 620 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்கின்றனர்.
அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.10 மற்றும் டீசல் விலையில் ரூ.7 குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்றிரவு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…