பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலை அதிகரிப்பு…! அதிர்ச்சியில் மக்கள்…!

Default Image

பொதுவாக அதிகபட்சமான மக்கள் சிலிண்டர் உபயோகிப்பதால் சிலிண்டர் விலை அதிகரிப்பு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதிக்கிறது.

இன்று அனைத்து வீடுகளிலுமே விறகு அடுப்பு பயன்படுத்துவதை தவிர்த்து, கேஸ் அடுப்பை தான் பயன்படுத்துகின்றனர். பொதுவாக அதிகபட்சமான மக்கள் சிலிண்டர் உபயோகிப்பதால் சிலிண்டர் விலை அதிகரிப்பு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதிக்கிறது.

 இந்நிலையில், வீட்டு சமையல் எரிவாயுவான எல்பிஜி சிலிண்டர்கள் விலை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பிற்கு பின், டெல்லியில் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ .719 , கொல்கத்தாவில் ரூ .745.50, மும்பையில் ரூ .719, சென்னையில் ரூ .735 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர்கள் விலை அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல், பெட்ரோல் விலையும், பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டருக்கு 35 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.86.65 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 35 பைசா உயர்ந்து ரூ .76.83 ஆகவும் உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்