இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மோகன்பாபு அகர்வால் என்ற வக்கீல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு விடுமுறைகால சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் வருகின்ற 16-ம் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் திறப்பதால் அன்று வழக்கமான அமர்வு முன்பு வழக்கை விசாரிக்க மனுதாரர் கோரிக்கை வைக்கலாம் என நீதிபதிகள் கூறினர்.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…