தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி..!
உச்சநீதிமன்றம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்தது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரே 3 கட்டங்களாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து 5 மாநிலங்களில் தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பிரதமர் பொதுவானவர் என்பதால் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல் சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
வழக்கறிஞர் எம்.எல் சர்மா தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு தடை விதிக்கமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.