வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

Default Image

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தேஜ் பகதூர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, இணையதளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி கொண்டிருந்த தேஜ்பகதூர் என்ற ராணுவ வீரர், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மிகக் குறைவான அளவில் உணவுகள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கடந்த மக்களவைத் தேர்தலின்போது, பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட நரேந்திர மோடியை எதிர்த்து, சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட தேஜ்பகதூர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கலின்போது மனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரி, மனுவை தள்ளுபடி செய்தார்.

அந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேஜ்பகதூர் ஊழல் பதவி நீக்கம் செய்யப்படவில்லை அல்லது ஒழுங்குகள் பதிவு நீக்கம் செய்யப்படும் சான்றிதழ் இணைக்க தவறிவிட்டதால் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, தேர்தல் அதிகாரி முடிவை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார் மனுவை விசாரித்த நீதிமன்றம், பகதூர் வாரணாசியில் ஓட்டுரிமை கொண்டவர்  இல்லை எனக்கூறி, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பிரதமர் மோடி தரப்பில், ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,  தேஜ்பகதூர் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியானது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்