தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு ..! நாளை விசாரணை

Default Image
  • நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 
  • குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவத்தில் 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அதில் ஒருவர் சிறுவன் என்பதால் அந்த சிறுவனை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.மீதியுள்ள 5 பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது

எனவே குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்  மனு  தாக்கல் செய்தனர்.இந்த மனு நாளை ( ஜனவரி 14-ம் தேதி ) 5 நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்